தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு... விசாரணை அமைக்க கோரிக்கை - elephant related news

கோவை: சிறுமுகை வனச்சரகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 15 யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு... விசாரணை அமைக்க கோரிக்கை...
கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு... விசாரணை அமைக்க கோரிக்கை...

By

Published : Jul 3, 2020, 6:47 PM IST

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உள்பட்ட பெத்திகுட்டை பகுதியில் கடந்த 28ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை படுத்திருப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவர் குழு யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்ற யானைக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை கண்காணித்த வனத்துறையினர், நோய்வாய்ப்பட்ட யானைக்கு தொடர்ச்சியாக ஆறு நாள்கள் மருத்துவ சிகிச்சை அளித்துவந்த போதிலும், யானையின் உடல்நலனில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து வனத்துறை மருத்துவர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதற்கான காரணத்தை கண்டறிய யானையின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. யானையின் உடல் மற்ற ஊண் உண்ணிகளுக்காக அங்கேயே விடப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கோவை வனக்கோட்டத்தில் 142 யானைகள் விபத்து, மின்சாரம், இயற்கையான முறையில் என பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 15 யானைகள் உயிரிழந்துள்ளன.

கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு... விசாரணை அமைக்க கோரிக்கை...

அதன் விவரம்...

1.போளுவாம்பட்டி வனச்சரகத்தில் மற்றொரு யானையுடன் நடந்த மோதலில் காயம்பட்டு ஒரு யானை உயிரிழந்தது.

2.காரமடை வனச்சரகத்தில் வறட்சி காரணமாக ஒரு யானை உயிரிழந்தது

3.மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மற்றொரு யானையுடன் நடந்த மோதல், பள்ளத்தில் விழுந்தது, துப்பாக்கியால் சுட்டது உள்ளிட்ட காரணங்களிளால் மூன்று யானைகள் உயிரிழந்தன.

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் மற்றொரு யானையுடன் நடைபெற்ற சண்டையில் காயம் பட்டும், மூன்று யானைகள் உடல்நலக்குறைவு என மொத்தம் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில் "மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மலையை ஒட்டியுள்ள தோட்டங்களில் வசிப்பவர்கள் கள்ள துப்பாக்கி கொண்டு யானைகளை விரட்டுவருகின்றனர். அவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் நேற்று ஒரு யானை இறந்த நிலையில் பல யானைகளுக்கு காயம்பட்டு உள்ளது. அதேபோல் சிறுமுகை வனச்சரகத்தில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் காட்டு யானைகள் பயிர்களை தொடர்ச்சியாக சேதப்படுத்துவதால் அங்கு உள்ள நீர்நிலைகளில் விஷம் கலந்து வைக்கின்றனர்" என விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இந்த இரண்டு இடங்களிலும் வனத்துறையினர் தனி குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details