தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் கொள்ளை.. கோவை பரபரப்பு சம்பவம்! - கோயம்புத்தூர்

கோவையில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் பணம் வழிப்பறி செய்த சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

robber in coimbatore
மாணவர்களிடம் கத்தி முனையில் கொள்ளை

By

Published : May 8, 2023, 9:19 AM IST

கோயம்புத்தூர்: கேரளாவைச் சேர்ந்த நாசிப் என்கிற மாணவன் புலியகுளம் பகுதியில் அறை எடுத்துத் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் 5 நண்பர்களும் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள், நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அறையில் இருந்த 2,85,000 மதிப்புள்ள 5 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் 500 பணத்தையும் எடுத்துக்கொண்டு, நாசிப்பை தாக்கி விட்டு அவர்களை அறைக்குள் விட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் அறையில் இருந்த மாணவர்கள் வெளியேறி இச்சம்பவம் குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்தனர். பின்னர், மொபைல் ட்ராக்கிங் தொழில் நுட்ப வசதியைக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரில் ஒருவரை தற்போது பிடித்துள்ளனர்.

மேலும் பிடிபட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த ஜெயராஜ் (23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தான் இச்செயலுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. பின்னர் அவரிடமிருந்து 95,000 மதிப்புள்ள 3 மொபைல் போன்கள் மற்றும் ஒரு கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மீதமுள்ள இருவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பத்திரம் இல்லாமல் 100 கோடி லோன்; லிங்குடு இன் மூலம் பலே மோசடி.. அம்பலமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details