கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வனச்சரகம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் தங்கள் வாழ்விட எல்லைக்காகச் சண்டையிட்டன. இந்தச் சண்டையில் இரண்டு யானைகளும் தந்தத்தால் தாக்கிக் கொண்டன.
வாழ்விட எல்லைக்காகச் சண்டை: ஒரு யானை பலி! - இரண்டு ஆண் யானைகள்
கோயம்புத்தூர்: வால்பாறை வனச்சரக பகுதியில் இரண்டு ஆண் யானைகள் ஒன்றுக்கு ஒன்று தந்தத்தால் தாக்கிக் கொண்டதில் ஒரு காட்டு யானை உயிர் இழந்தது.
elephant
இதில் ஒரு காட்டு யானை உயிர் இழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். பின் தமிழ்நாடு வனத் துறை கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர், துணை இயக்குநர் உள்ளிட்டோர் மூலம் இறந்த காட்டு யானைக்கு உடற்கூராய்வு செய்து முடிக்கப்பட்டது.