கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன், கோபால் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர். கோட்டூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் இவர்கள் மீது மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - coimbatore district news
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபால் மற்றும் இவர்கள் மீது மோதிய நபர் ஆகியோர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோட்டூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு