தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் - பல கோடி ரூபாய் தங்கம் பறிமுதல் கோவையில்

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவை கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து 7 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்- புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
கோவை விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்- புலனாய்வு பிரிவு அதிகாரிகள்

By

Published : Sep 6, 2022, 5:00 PM IST

கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் 7 பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததையடுத்து அலுவலர்கள் 7 பேரையும் தனித்தனியே அழைத்துச்சென்று சோதனையிட்டனர். மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அதில் செயின்கள், வளையல்கள் மற்றும் பெல்ட் வடிவிலான தங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

ஏழு பேரிடமிருந்தும் ரூ.1.83 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தைப்பறிமுதல் செய்த அலுவலர்கள், ஏழு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கோழிக்கோட்டைச்சேர்ந்த பிரோஸ் ரகுமான் என்பவரிடமிருந்து மட்டும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details