கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மதுக்கரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மறித்து சோதனை செய்தனர். அவர்களது இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.