ஒவ்வொரு ஆண்டும் மகாபலி மன்னர் இந்தப் பூமிக்கு வருகை தரும் நன்னாளே ஓணம் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை என 10 நாள்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்நாளில், உலகம் முழுவதும் உள்ள கேரள மக்கள், நேரிலும், சமூக வலைதளங்களிலும் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்து தெரிவித்தும், பூக்கோலமிட்டும் மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் உள்ள கேரள மக்கள் வெகு விமரிசையாக ஓணம் கொண்டாடுவது வழக்கம்.
குறிப்பாக கோவையில் வசிக்கும் கேரள மக்கள், சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஒன்று திரண்டு கோலகலமாக ஓணம் கொண்டாடுவார்கள். முக்கியமாக, இந்நாளில் குழந்தைகளுக்கும் பெயர் சூட்டுவர்.
ஆனால், கடந்த ஆண்டு கரோனா காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை. அதன் காரணமாக, பெரும்பாலானோர் கோயிலுக்கு வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவையில் கோயிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் இந்நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருப்பதால் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற நினைத்த பக்தர்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த ஆண்டும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கப்படாததால், பொதுமக்கள் வெளியில் நின்றவாறே கடவுளை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.
இதையும் படிங்க:கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் ஆலோசனை