கோயம்புத்தூரில் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியக் கலாசார நட்புறவுக் கழகத்தின் சார்பாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் கூறுகையில், "நேருவின் குடும்பத்தை அழிப்பதே பிரதமர் மோடி வேலையாக வைத்துள்ளார். தற்போது, நாட்டை கறுப்புப் பணம் தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. நேரு காட்டிய வழியைப் பின்பற்றாவிட்டால், இந்தியா அடி மட்டத்துக்குத் தான் செல்ல நேரிடும். என்.ஐ.டி, ஐ.ஐ.டி கல்லூரிகளைப் பொறுத்தவரை சாதி பாகுபாடு அதிகமாக உள்ளது. இதை, இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை' என்றும் குற்றம் சாட்டினார்.