கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது பக்கத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதை அடுத்து, அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு பொன்னுசாமியைப் பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது - முதியவர் கைது
கோவை: பொள்ளாச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
SEX
பின்னர், சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் பொன்னுசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்