கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொதுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக மேலும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 187 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமீன்; விரிவான அறிக்கை அளிக்க சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு!
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இது குறித்து, பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவையைச் சேர்ந்த 74 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சுவாச பிரச்சனை, காரணமாகக் கடந்த 6 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியான நிலையில் அவர் நேற்று உயிரிழந்தர்.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,621 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது, கோவையில் 10 பேர் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி!