தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூர்வீக சொத்துக்காக கொடுமைப்படுத்தும் மகன்: சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மனு! - பூர்வீக சொத்துக்களைக் கேட்டு கொடுமை

கோயம்புத்தூர்: பூர்வீக சொத்துக்காகக் கொடுமைப்படுத்தும் மகன், மருமகன், உதவி காவல் துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் மனு அளித்துள்ளார்.

முதியவர் மனு
முதியவர் மனு

By

Published : Apr 28, 2021, 5:37 PM IST

பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி சந்தான லெட்சுமியும், மகன் செந்தில்வேலும் பூர்வீக சொத்துக்களை எழுதி வைக்கும்படி இவரை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

முதியவர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கடந்தாண்டு புகார் கொடுத்தார். ஆனால் மீண்டும் முதியவரை அவரது குடும்பம் சொத்துக்காக அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தற்போது, குணமடைந்து வீடு திரும்பிய முதியவர் தாலுகா காவல் நிலையத்தில் தன் மகன், மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தனது குடும்பத்துடன் கூட்டு சேர்ந்து மிரட்டி சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் மனைவியை மிரட்டி தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வைத்துள்ளதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு சார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details