தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது - கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

கோவை : ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Old man arrested pocso act for molesting minor girl in covai
Old man arrested pocso act for molesting minor girl in covai

By

Published : Jul 5, 2020, 1:12 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 65). இவரது வீட்டிற்கு அருகாமையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் தம்பதிக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இத்தம்பதியினர், காய்கறி வியாபாரம் செய்வதற்காக பீளமேட்டிற்கு அடிக்கடி சென்று வர வேண்டிய சூழல் நிலவி வந்த நிலையில், தங்களது குழந்தையை,உறவு முறை சொந்தமான முதியவர்வரதராஜனை நம்பி அவரிடம்விட்டுச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வரதராஜன் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், வரதராஜனை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details