கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாமணி(65). இவர், வீட்டில் நேற்றிரவு தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராதாமணியை அரிவாளால் வெட்டிவிட்டு, அரிவாளை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை ராதாமணி வெட்டுப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு, வீட்டை சோதனை செய்ததில் அந்த கும்பல் விட்டுச்சென்ற அரிவாளை காவல் துறையினர் கண்டெடுத்தனர். மேலும், வீட்டின் பீரோவும் திறந்துள்ளதையும் கண்டனர். இதனை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டி தனியாக வசித்து வருவதால், அவரிடம் கொள்ளையடிக்க அந்த கும்பல் வந்ததா, அல்லது கொலை செய்ய வந்ததா, எதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!