கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்துவந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஆண் மற்றும் பெண் என இருவர் அவரது வீட்டிற்கு சென்று, வீடு ஏதேனும் வாடகைக்கு உள்ளதா? எனக் கேட்டுள்ளனர்.
வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்கள் - கோயம்புத்தூர்
கோவை: வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதன்பின்னர், திடீரென ஏஞ்சலினை தாக்கிய இருவர், அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் நகையை பறித்தனர். மேலும் அவரது கழுத்தை அறுத்து கொலைசெய்து இருவரும் தப்பிச் சென்றனர். இந்நிலையில் அருகில் வசிப்பவர்கள் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மேரி ஏஞ்சலின் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்து உள்ளார்.
இதையடுத்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.