மும்பையிலிருந்து கோவைக்குச் செல்லும் "லோக்மான்ய திலக் விரைவு ரயில் இன்று கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. இரண்டாம் நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் ரயிலைச் சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது, கழிவறை கதவு உட்புறமாகத் தாளிடப்பட்டு இருந்தது .
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, கழிவறையின் கதவை உடைத்தனர். அப்போது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் .இதனையடுத்து, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.