கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று காலை ராஜாவீதி தேர்நிலைத் திடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த பெண்ணின் பின்புறத்தில் காவலர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியது.
போலீஸ் பேருந்து மோதியதில் பெண் பலி; திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சி! - police bus accident
கோவை: ராஜாவீதி தேர்நிலைத் திடலில் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் கலா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

old-lady-died-in-police-bus-accident
சிசிடிவி காட்சி
இவ்விபத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவை அனைத்தும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்த பெண் பேரூர் பகுதியைச் சேர்ந்த கலா(55) என்பதும், வேலைக்கு செல்லவதற்காக பேருந்தில் இறந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.