தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்ல மறந்த தேர்தல் அலுவலர்கள்? - Officers forgot to carry the ballot box

கோவை: சூலூர் ஊராட்சிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கலங்கல் வாக்குச்சாவடி  வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல மறந்த அலுவலர்  வாக்குச்சாவடியில் விட்டுச் சென்ற வாக்குப்பெட்டி  Officers forgot to carry the ballot box  Officers forgot to carry the ballot box in coiambature
வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல மறந்த தேர்தல் அலுவலர்கள்

By

Published : Jan 1, 2020, 5:26 AM IST

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 3ஆவது வார்டிற்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

பின்னர் அப்பள்ளியில் அமைக்கப்பட்ட மற்ற இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நாளன்று அலுவலர்களுக்கு உணவு வழங்கிய பாத்திரங்களை காணவில்லையென்று உணவகத்தின் உரிமையாளர் ஊராட்சி அலுவலரிடம் பள்ளியின் சாவியை வாங்கி பள்ளியைத் திறந்து பாத்திரங்களைத் தேடியுள்ளார்.

அப்போது, மூன்றாவது வார்டிற்கு அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய வாக்குப்பெட்டிகள் இருந்துள்ளன. இந்தத் தகவல் ஊர் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட பள்ளியில் கூடத்தொடங்கினர்.

இச்சம்பவம் குறித்து ஊராட்சி செயலர், சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி மற்றும் சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவலளித்துள்ளார். மாலை ஆறு மணி வரை காவலர்கள் வராததால் அதிருப்தியடைந்த அரசியல் கட்சியினர் பள்ளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், ஊராட்சி செயலர் வகுப்பறையைத் திறந்து வாக்குப்பெட்டிகளை அரசியல் கட்சியினருக்குக் காண்பித்தார். அதில் வாக்குச்சீட்டுகள் இல்லை, காலிப்பெட்டியாக இருந்தது. ஆனாலும் இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், வாக்குப்பெட்டியை விட்டுச்சென்ற விவகாரத்தில் சந்தேகம் உள்ளது.

வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல மறந்த தேர்தல் அலுவலர்கள்

ஆளும் கட்சியினர் வாக்குப்பெட்டியை மாற்றியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டு இரவு வரை எந்த அதிகாரியும் வராதது ஏன் எனக்கேட்டு செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சமூகவலைதளத்தில் வைரலான செய்தி: ஒரு மணி நேரத்தில் மூதாட்டிக்கு கிடைத்த உதவித்தொகை

ABOUT THE AUTHOR

...view details