கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள என்டிசி ஆலையின் முன்பு 50க்கும் மேற்பட்ட அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் என்டிசி நிர்வாகம் உடனடியாக அனைத்து ஆலைகளையும் இயக்க வேண்டும், ஆலைகளை இயக்கும்வரை தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கருப்புக் கொடிகளை ஏந்தியும், கருப்பு கொடியை அணிந்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்ட என்டிசி ஊழியர்கள் - கோவை மாவட்டம் காட்டூர் பகுதி
கோவை: முடக்கி வைக்கப்பட்ட ஆலைகளை உடனடியாக இயக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிசி ஊழியர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலைகளுக்குள் சென்று போராட்டம் நடத்த முடிவு எடுத்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து பேசிய ஏஐடியூசி துணை தலைவர் ஆறுமுகம், “வீடு திரும்பா போராட்டம் நடத்த திட்டமிட்டு வந்த அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களை ஆலைக்குள் விடாமல் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. எங்களின் கோரிக்கை இரண்டு மட்டும்தான் ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டும். பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் போராட்டத்தை மீண்டும் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.