தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலான மழை பெய்துவருகிறது.
கோவையில் தொடரும் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - நொய்யல்
கோவை: இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
அதன்படி கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர பகுதிகளான சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், சுந்தராபுரம் இடங்களிலும் இரவு முதலே பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது . இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் கடந்த சில மாதங்களாக வறண்டுகிடந்த நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.