தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநிலத் தொழிலாளி தொழிற்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலை! - north state worker commits suicide in factory

கோவை: சிங்காநல்லூர் பகுதியிலுள்ள கனரக வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

north-state-worker-commits-suicide-in-factory
north-state-worker-commits-suicide-in-factory

By

Published : May 26, 2020, 2:09 AM IST

கோவை சிங்காநல்லூர் - எல்.ஜி. தொழிற்பேட்டைப் பகுதியில் கனரக வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அசோக் பெக்ரா(32) என்பவர், அங்கு தங்கிப் பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் திருமணமானவரான இவருக்கு ஒடிசாவில் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக கடந்த இரு மாதங்களாக அசோக், தொழிற்சாலையிலேயே தங்கியுள்ளார். மேலும், பலமுறை முயற்சி செய்தும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து மனமுடைந்த அசோக் பெக்ரா, தொழிற்சாலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

ABOUT THE AUTHOR

...view details