கோவை மாவட்டத்தில் மேகாலாயா, மணிப்பூர், அஸ்ஸாம் உள்பட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி கல்லூரிகளில் படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இவர்களில் பலர் சாய்பாபா காலனி பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகின்றது.
வடமாநில பெண்களின் தோற்றத்தைக் கொண்ட அவர்களை சீனாவை சேர்த்தவர்கள் என நினைத்துக் கொண்டு, அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் தள்ளிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வடமாநிலப் பெண்கள் சாய்பாபா காவல்துறையில் புகார் அளித்தனர்.