தமிழ்நாடு

tamil nadu

ரூ. 7,000 போனஸ் தாங்க; கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் மனு

தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் தொழிலாளர்களுக்கும் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7000 ரூபாய் போனஸை வழங்கக் கோரி, தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

By

Published : Dec 5, 2022, 8:43 PM IST

Published : Dec 5, 2022, 8:43 PM IST

collector office  Non Construction Organization Councilors  Petition in collector office  Petition  Non Construction Organization  Non Construction Organization Councilors Petition  coimbatore news  coimbatore latest news  கட்டுமான அமைப்புசாரா பேரவையினர்  கட்டுமான அமைப்புசாரா பேரவை  கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் மனு  மனு  மாவட்ட ஆட்சியர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு  கோயம்புத்தூர்  போனஸ்
கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் மனு

கோயம்புத்தூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையினர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், HMS பேரவை துணைத்தலைவரும் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினருமான மனோகரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

அதில், “தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் சார்பாக, தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் தொழிலாளர்களுக்கும் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7000 ரூபாயை போனஸாக வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 4 லட்சம் ரூபாயை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கும் 10,11,12-ம் வகுப்புகளுக்கான உதவித்தொகையை வழங்கிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி நியமனங்களில் 14 சதவீதத்தை தாண்டாத இட ஒதுக்கீடு - பாமக நிறுவனர் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details