திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சமூகநீதிக் கட்சி சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கணேசன் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.
சூலூர் இடைத்தேர்தலில் சமூகநீதிக் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்! - By-Election
கோவை: சூலூர் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சமூகநீதிக் கட்சி சார்பாக கணேசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சமூகநீதிக் கட்சி வேட்பாளர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கைத் தெரிவித்தார்.