பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடியாகும். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை, செவ்விளநீர் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
மழையில்லாததால் பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதி பாதிப்பு!
பொள்ளாச்சி: போதிய மழையில்லாத காரணத்தால் இளநீர் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தாண்டு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேர்த்துமடை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. இளநீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் வெளிமாநிலத்தில் இருந்து இளநீர் வாங்க வரக்கூடிய வியாபாரிகள் வராததால் முற்றிலும் ஏற்றுமதி முடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.