தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது' - எஸ்.பி.வேலுமணி - மீண்டும் குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி வரக்கூடாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

dmk is family party
மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது'- எஸ்.பி. வேலுமணி

By

Published : Jan 1, 2021, 7:10 AM IST

கோவை:பொள்ளாச்சி நல்லிக் கவுண்டம்பாளையம், ராசக்க பாளையம் பகுதியில் அம்மா மினி கிளீனிக்கை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று (டிசம்பர் 31) தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்வில் பேசிய அவர், "திமுக ஒரு குடும்பக் கட்சி, திமுகவினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திப்பார்கள். மக்களவைத் தேர்தலில் திமுகவின் 38 எம்பி-க்கள் இதுவரை மக்களைச் சந்தித்தது உண்டா, மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கோவை மாவட்டத்தில் அவர் ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி வரக்கூடாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்" என்றார்.

மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது'- எஸ்.பி. வேலுமணி

இதையும் படிங்க:குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலக தயார் - எஸ்.பி. வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details