பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாதிகள் ஊடுறுவல், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அலுவலர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, நாகை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை குறிவைத்து அவ்வப்போது சோதனை நடக்கிறது.
இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் கோவை உக்கடம், வின்சென்ட் சாலை, ஜிஎம் நகர், பிலால் எஸ்டேட் உள்ளிட்டப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.