தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெராயின் கடத்தல் விவகாரம்: கோவையில் என்ஐஏ அலுவலர்கள் ஆய்வு! - coimbatore latest news

குஜராத் துறைமுகத்தில் 2 ஆயிரத்து 988 கிகி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கோவையில் உள்ள ஒருவர் வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஹெராயின் கடத்தல் விவகாரம்
ஹெராயின் கடத்தல் விவகாரம்

By

Published : Oct 9, 2021, 11:00 PM IST

கோவை: குஜராத்தின் முந்த்ராவில் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில், செப்டம்பர் 18ஆம் தேதி வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 988. 22 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

இது உலகின் மிகப்பெரிய ஹெராயின் கடத்தல் பறிமுதல் எனவும் கூறப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக வெளிநாட்டினர் உள்பட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்

கடத்தலில் வெளிநாட்டவர்கள் தொடர்பிருப்பதால், வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வடவள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வீட்டில், என்ஐஏ அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details