கோயம்புத்தூர்: கார் குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரை, தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகள் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 7ஆம் தேதி பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி முகமது தல்கா,முகமது தவ்பிக், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான்ஷேக் இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
கோவை குண்டுவெடிப்பு; கைதான நபர்களிடம் என்ஐஏ மீண்டும் விசாரணை? - கார் குண்டு வெடிப்பு
கோவை காரில் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கைதானவர்களிடம் என்ஐஏ மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கைதான நபர்களிடம் என்ஐஏ மீண்டும் விசாரணை
பொங்கல் விடுமுறை என்பதால் 6 நாட்கள் விசாரணை முடித்து, 17ஆம் தேதி 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த 6 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டு நாளை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட PFI நிர்வாகி பழனியில் கைது; என்ஐஏ 2-வது நாளாக விசாரணை