கோயம்புத்தூர்: உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலையில் கார் ஒன்று வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார். இதுதொடர்பாக அவரது கூட்டாளிகள், முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் இறந்த ஜமேஷா முபினின் மனைவி நஸ்ரத், கோவை ஜே.எம்4 கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.