கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த வடக்கலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் கோகிலவானி. இவர் அன்னூர் அரசுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி மாணவி கோகிலவானி வீட்டில் சானிபவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முதலில் மாணவி அடிக்கடி கைப்பேசியில் பேசியதைப் பெற்றோர் கண்டித்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டார், எனக் கூறப்பட்ட நிலையில் மாணவியின் தாய் ராதாமணி மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.