தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் - கரோனா தடுப்பூசி

கோவை: கரோனா தொற்று அதிகரித்தா புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Aug 29, 2021, 9:00 AM IST

கேரள மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 32,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கோவையை அடுத்த வாளையார் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேரளாவில் பாலக்காடு,மலப்புரம் மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் அதிகமாக இருப்பதன் காரணமாக எல்லையில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா நெகட்டிவ் சான்றிதழ், இரு தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் போதுமான ஆவணங்கள் வைத்திருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கரோனா தொற்று விகிதம் லேசாக உயரந்துள்ளது. இது அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டி இருக்கும்.

கேரளாவில் இருந்து வரும் கோவைக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு அனுப்ப பாலக்காடு, மலப்புரம் மாவட்ட நிர்வாகங்களுடக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை மாணவர்கள் கேரளாவில் போட்டிருந்தால் இரண்டாவது தவணை இங்கு கல்லூரிகளில் போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் இது வரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தடூப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 70 சதவீதம் அரசு சார்பிலும் மற்றவை தனியார் மருத்துவமனை, சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் போடப்பட்டுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details