தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் விபத்து... என்ஐஏக்கு புதிய அலுவலகம்...

கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் என்ஐஏக்கு புதிய அலுவலகம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் என்ஐஏக்கு புதிய அலுவலகம்
கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் என்ஐஏக்கு புதிய அலுவலகம்

By

Published : Oct 30, 2022, 11:57 AM IST

கோயம்புத்தூர்: கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது இதுதொடர்பாக, இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டிஐஜி வந்தனா தலைமையிலான என்ஐஏ அலுவலர்கள், கோவையில் முகாமிட்டு ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை கோவை நகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், என்ஐஏ அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் கோவையில் என்ஐஏக்கு அலுவலகம் இல்லாததால், கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் என்ஐஏக்கு இரண்டு அறைகளுடன் கூடிய புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு என்ஐஏ அலுவலர்களுடன் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 காவலர்கள் வழங்கி உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அண்ணாமலை வதந்திகளை பரப்புகிறார்... காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்... தமிழ்நாடு காவல்துறை...

ABOUT THE AUTHOR

...view details