தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய உறுப்பினர் சேர்க்கை; அமைச்சர் பங்கேற்பு - New members

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் அதிமுக இளைஞர் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

New membership recruitment consultation meeting was held in Coimbatore
New membership recruitment consultation meeting was held in Coimbatore

By

Published : Sep 3, 2020, 10:35 PM IST

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதிகளான மோதிரபுரம், அன்னை சத்யா வீதி, நூர் மஹால், நந்தினி மஹால், கே.எம். மஹால் ஆகிய இடங்களில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது; 'அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் அமைந்திட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்கீழ், இளைஞர்கள் கல்லூரி மாணவ - மாணவியர் பாசறையில் இணைந்து பணியாற்ற வேண்டும். கழக நிர்வாகிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தந்து அரவணைத்துச் செல்ல வேண்டும். வரும் 2021ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளஞ்செழியன், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி கழகச் செயலாளர் நரி முருகன், கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் விஜயகுமார், சூளேஸ்வரன்பட்டி வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details