தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2022, 6:16 PM IST

ETV Bharat / state

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்...உயிரிழந்த ஜமேஷா முபின் குறித்த புதிய தகவல்

கோவை கார் சிலண்டர் வெடித்ததில் உயிரிழந்த ஜமேஷா முபின் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீட்டில் ஒரு மாதம் வசித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் வெடித்த சம்பவம்
கார் வெடித்த சம்பவம்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் 5 பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து 3 நாட்கள் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இதையடுத்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வசிக்கும் அப்துல் மஜீத் என்பவர், உயிரிழந்தவர் ஜமேசா முபின் என்பதை அடையாளம் காட்டினார் எனவும், அப்துல் மஜீத் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை வாடகைக்கு வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த கோவிலுக்கு அருகே ஒரு மாதம் முன்பு வரை ஜமேசா முபின் வசித்துள்ளது தெரியவந்துள்ளது. கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ரியாஸ், நவாஸ் ஆகிய இருவரும் முதலில் போன் செய்து விவரம் கூறியதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய நபருக்கு பாஜக பயிற்சி ? சபாநாயகர் பரபரப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details