தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் அமையவுள்ள பேருந்து நிலையம் - அடிக்கல் நாட்டிய அமைச்சர் வேலுமணி - கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம்

கோவை: வெள்ளலூர் பகுதியில் ரூ.168 கோடி மதிப்பில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

new bus stand
new bus stand

By

Published : Jan 25, 2020, 8:41 AM IST

கோவை மாநகராட்சி பகுதியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 61.2 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, தங்குமிடம், உணவகம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் வெள்ளலூரில் அமைய உள்ளது. இதன் மூலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும்.

புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் வேலுமணி

மேலும் வெள்ளலூர் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பை கிடங்கு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார். அங்குள்ள குப்பைகளை மேலாண்மை செய்ய புதிய யுக்தி கையாண்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

ABOUT THE AUTHOR

...view details