பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் மலைவாழ் மக்கள், மின் பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியாகும்.
வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ரு.5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் - Navamalai
பொள்ளாச்சி: நவமலையில் ரூ.5 லட்சம் செலவில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு புதிய கண்காணிப்பு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதி மலையின் அடிவாரத்தில் உள்ளதால் யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, பலாப்பழம் ஆகியவற்றை சாப்பிடிவிட்டு செல்கிறது. இதையடுத்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு வனப் பகுதியையெட்டி ரூ.5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
இங்கு சுழற்ச்சி முறையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், வனப்பகுதியில் பொதுமக்கள் அத்துமீறி வருவதும் முற்றிலும் தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.