கோவை:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வள்ர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பின்ன்ர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
முறையான குடிநீர் விநியோகம்
கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சிகளில் 1200 கிராமங்கள் உள்ளது. அதில் 332 கிராமங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் மீதமுள்ள கிராமங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், கோவை மாநகராட்சியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 5 ஆயிரம் தெரு விளக்குகள் தற்போது, எரியாமல் உள்ளன; ஒரு வாரத்திற்குள் ஊரக பகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.