கோவை:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பெட்டதாபுரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இங்கு விடுதியில் உணவு சரியில்லை என்று இன்று மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ததாகத் தெரிகிறது. விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் புகார் தெரிவித்த மாணவியை நிர்வாகம் மிரட்டியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கல்லூரி முதல்வர், அந்த மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்; காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க வற்புறுத்தியதாகவும் மாணவிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த தகவலை மாணவி சக மாணவர்களிடம் தெரிவித்த நிலையில் கல்லூரி மாணவர்கள் முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காரமடை பெட்டதாபுரம் பகுதியில் கோவை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.