தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நவதானிய உணவுத்திருவிழா - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நலத்துறை பெண் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்

கோவையில் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நவதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நவதானிய உணவு திருவிழா..!
கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நவதானிய உணவு திருவிழா..!

By

Published : Aug 12, 2022, 9:23 PM IST

கோவை: 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து, உகந்த உணவுத் திருவிழா என்ற தலைப்பில் நவதானியங்களால் ஆன உணவுத்திருவிழா நடைபெற்றது.

இந்த உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உணவுத்திருவிழாவில் இடம் பெற்றிருந்த நவதானிய உணவுப்பொருட்களை சுவைத்தனர். இந்த உணவுத்திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, ராகி, மக்காச்சோளம் போன்ற பல வகையான தானியங்களால் ஆன இட்லி,தோசை,கேக், வடை போன்ற பல வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன.

அதேபோல 50 வகையான இட்லிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த உணவுத்திருவிழாவில் கேட்டரிங் மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நலத்துறை பெண் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நவதானிய உணவுத்திருவிழா
இந்த உணவுத்திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க:பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி வந்த அழகர்கோயில் தேர்

ABOUT THE AUTHOR

...view details