தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைதிக்குப் பெயர்போன மாவட்டம் கோவை' - கலெக்டர் பெருமிதம் - தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணி -

கோவை: கோவை அமைதிக்குப் பெயர்போன மாவட்டம் என்று தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

National Voter Day Awareness Rally
National Voter Day Awareness Rally

By

Published : Jan 25, 2020, 2:46 PM IST

வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும். சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதன்படி வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.

இத்தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட துறை மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் சாலை வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள், தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கு. ராசாமணி, ”தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. கோவை காவல் எல்லைக்குட்பட்ட சி-2 பந்தய சாலை (Race Course) காவல் நிலையம், மாநில அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்ததற்குக் காரணம், அங்கு பணிபுரியும் காவலர்கள்தான். அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமைதிக்குப் பெயர்போன மாவட்டமாக கோவை திகழ்கிறது. கோவையில் வாழும் மக்கள் அனைவரும் அமைதியை பறைசாற்றக் கூடியவர்கள்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. அதிரடி கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details