தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய அளவிலான யோகா போட்டி: 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு! - pollachi latest news

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

யோகா

By

Published : Oct 11, 2019, 7:12 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வைஏற்படுத்தும் விதமாகவும், யோகா கலையை ஊக்குவிக்கவும் வாமேதேவா யோகா மையம் சார்பில் தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த யோகாசன போட்டிகளில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த யோகா போட்டிகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தேசிய அளவிலான யோகா போட்டி

இதில் மாணவ - மாணவியர் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்கள் செய்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இன்று முதல்நாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளைய போட்டிகள் முடிவடைந்த பின்னர் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதையும் படிக்கலாமே: பெண் முதுகின் மீது ஏறி... அசரவைக்கும் பிரணிதாவின் ஆக்ரோ யோகா!

ABOUT THE AUTHOR

...view details