கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைக்க சிலர் முயற்சித்தனர். அதோடு சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மேற்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும்.