கோயம்புத்தூர்,காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் வளாகத்தில் இயங்கி வரும் ஆண்கள் விடுதியில் தங்கி ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த காம்ப்ளக்ஸில் தங்குவற்காக தஞ்சாவூரைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் வந்துள்ளார். இவர் அறைக்கு அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு நபரும் தங்கியுள்ளார். இருக்கின்றார்.
இவர்களின் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு விடுதிக்கு சென்ற அவர்கள்,காலை வந்து பார்த்த போது பைக் காணாமல் போய் இருப்பதை அறிந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், வெளியே வண்டியை நிறுத்திவிட்டு கேஷுவலாக வளாகத்தின் உள்ளே வந்து கேடிஎம் பைக் மற்றும் ஆக்டிவாவை திருடிச் சென்றுள்ளனர்.