கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க தொடக்க விழா நேற்று (ஜனவரி 1) நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முன்னாள் மாணவர் சங்க கல்வெட்டையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் .
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, அமெரிக்கா நிலவுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்பி கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்து, அதன்பின் மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதுபோலவே ககன்யான் திட்டம் கரோனாவிற்கு முன்பு மூன்றடுக்கு திட்டமாக தொடங்கப்பட்டது. அதன் முதல் அடுக்கு ஆராய்சிகள் அடங்கியது. 2ஆம் கட்டம் ஆளில்லா விண்கலனை அனுப்புவதாகும். 3ஆம் கட்டத்தில் இந்திய மண்ணில் இருந்து மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.