இன்று காலை 7 மணி முதல் நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மூத்த வாக்காளர்கள், பெண்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
இந்நிலையில், சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமி வாக்களித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, சூலூர் தொகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.