மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பல அமைப்பினர் தங்கள் குடும்பங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குடும்பத்துடன் பேரணி இந்தப் பேரணியில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி ஆனது கோவை அண்ணாசாலையில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியும் தீயசக்திகளின் வடிவம் உடைய முகமூடிகளை அணிந்தும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் உமர், ' மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும்.இதனை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒரு அமைச்சரவையைக் கூட்டி இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூற வேண்டும் ' என்றும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி மேலும் ' இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு சட்டம் என்றால் அது அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். இவ்வாறு பாரபட்சம் காட்டும் விதமாக இருக்கக் கூடாது' என்றும் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்த சட்டம் வேண்டும் - ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வழக்கறிஞர்கள்