கோவையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் முதல் லைவ் கான்செர்ட்! கோயம்புத்தூர்:பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் முதல் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற லைவ் இன் கான்செர்ட் அறிவிப்பு நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர், “முதல் கான்செர்ட் வரும் 27ம் தேதி, கோவை கொடீசியா வளாகத்தில் நடத்துகிறோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006இல் இருந்து இசை அமைத்து வருகிறேன். 98 படங்களுக்கு இசை அமைத்து முடிந்து 100 படங்கள் வரை வந்துவிட்டேன். கோவையில் நடைபெறும் லைவ் கான்செர்ட் நிகழ்வு தரமான நிகழ்வாக இருக்கும்.
ரெக்கார்டிங்கில் இருந்து லைவாக பண்ணுவது எதிர்பார்ப்பாக உள்ளது. படத்தில் வரும் பாரம்பரிய இசை போன்ற இசைகளை கதை தான் முடிவு செய்யும். ஆயிரத்தில் ஒருவன் படம் போன்ற இசையும் உள்ளது. லைவ் நிகழ்வில் சத்திய பிரகாஷ், ஹரிணி, ஸ்வேதா மோகன், மாளவிகா போன்ற பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில் 40 - 45 பாடல்கள் பாடப்பட உள்ளன. லைவ் நிகழ்ச்சியில் சினிமாவில் கேட்டதை விட சிறப்பானதாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறேன். ரஜினி சார் பண்ணாத படமும் இல்லை, கமல் சார் பண்ணாத படமும் இல்லை.
சிவப்பு மஞ்சள் பச்சை குடும்ப படம், டார்லிங் படம் போன்றவை டிவியில் பிளே பேக் ஆன படம். ரிபெல் திரைப்படம் அரசியல் சார்ந்த படம். ஆர்டிஸ்டாக இப்படித் தான் படம் செய்ய வேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. அனைத்து படமும் பண்ன வேண்டும்.
லைவ் கான்செர்ட் பண்ணுவது ஒரு குவாலிட்டி மேஜிக். செலிபரேசன் ஆப் லைப்-பை ப்ரொமோஷன் பண்ணுவோம். இந்த லைவ் கான்செர்ட் நிகழ்வுக்கு நடிகர் ஆர்யா வருவதாகத் தெரிவித்தார். நீங்கள் மகிழும்படியாக பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு முதலில் ட்விட் செய்து இருந்தேன். இளைஞர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் கருத்து வேறுபாடு இல்லாமல் நடந்தது. தற்போது வந்த ஜல்லிக்கட்டு தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
நான் நான் தான். ஏ.ஆர்.ரஹ்மான் லெஜண்ட். நான் இப்பதான் வளர்ந்து வருகிறேன். ரஹ்மான் போன்று யாரையும் வைத்து கம்பேர் பண்ணக் கூடாது. கோவையில் அதிகபட்சமாக தமிழ்ப் பாடல்கள் பாடுவோம். இசையமைப்பாளர் வரி தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். திரைப்பட இயக்கத்திற்கு 2 வருடங்கள் நேரம் செலவழிக்க வேண்டும். அந்த நேரம் இப்போது, எனக்கு இல்லை. ஆனால், ப்ரொடியூஸ் செய்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் விரும்பி கேட்க, ’’யாத்தே யாத்தே’’ பாடலை பாடிக் காட்டினார்.
இதையும் படிங்க: Keerthy Suresh: "பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்".. கீர்த்தி சுரேஷின் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்!