கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்குவந்த பெண் ஊழியர், உதவி பொறியாளர் உள்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் சார்பில் நகராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், நகராட்சி அலுவலக ஆணையர் உள்பட 12 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ஐந்து நாட்கள் நகராட்சி அலுவலகம் மூடப்படுகிறது என்றனர்.