மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை தொழில்துறை அமைப்பினர் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரைண்டர், மின் மோட்டார் போன்ற இயந்திரங்களை காட்சிப்படுத்தி தொழில்துறை அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறுகுறு தொழிற்சங்கத்தலைவர் ஜேம்ஸ்,” கரோனா நெருக்கடிக்கு பின்னர் தற்போதுதான் தொழில்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்போது எவ்வித முகாந்திரமும் இன்றி தொழிற்துறை சார்ந்துள்ள அனைத்து மூலப்பொருட்களுக்கும் 30 விழுக்காட்டில் இருந்து 140 விழுக்காடு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருட்கள் விலையுயர்வு என்பது தங்கத்தின் விலையை விட அதிகமாகவுள்ளது. இதனால் சிறு குறு தொழில் துறையினருக்கு வேலைவாய்ப்பு வராது. கோயம்புத்தூர் தொழிற்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.