கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாளக்கரை கிராமத்தில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் காலனி உள்ளது. இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த வீடுகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்களிடம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.